
| கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. | 111 |
| குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். | 112 |
| ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப் பார்மின் பழம்பொரு ளேயாம். | 113 |
| சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை மிக்க மலத்தை விடு. | 114 |
| அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந் துறுமின்க ளும்முளே யோர்ந்து. | 115 |
| நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில் முற்றுமவ னொளியே யாம். | 116 |
| ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால் ஈசன் கருத்தா யிரு. | 117 |
| இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில் பராபரத்தோ டொன்றலு மாம். | 118 |
| மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில் ஒக்க சிவனுருவ மாம். | 119 |
| வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும் காண்டற் கரிதாஞ் சிவம். | 120 |
