
| தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. | 171 |
| அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து. | 172 |
| சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில் பவநாச மாகும் பரிந்து. | 173 |
| உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம். | 174 |
| நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால் அனைத்துலகும் வீடா மது. | 175 |
| உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு திடம்படு மீசன் றிறம். | 176 |
| தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு. | 177 |
| மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம். | 178 |
| விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. | 179 |
| சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு. | 180 |
