கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா முற்றுடம்பா லாய வுணர்வு. | 21 |
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய வுள்ளுடம்பி னாய வொளி. | 22 |
சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு என்றுங் கெடாத திது. | 23 |
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு மொருபயனைக் காட்டு முடம்பு. | 24 |
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் றொடர்பு. | 25 |
நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு. | 26 |
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக் கள்ள வுடம்பாகி விடும். | 27 |
பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு மெய்க்குள்ளா மாய வுடம்பு. | 28 |
வாயுவினா லாய வுடம்பின் பயனே யாயுவி னெல்லை யது. | 29 |
ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா லன்பதி லொன்றா மரன். | 30 |