
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். | 11 |
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். | 12 |
ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். | 13 |
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. | 14 |
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னிய தேயாம். | 15 |
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. | 16 |
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. | 17 |
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. | 18 |
உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. | 19 |
அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். | 20 |