
எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. | 81 |
பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். | 82 |
எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். | 83 |
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். | 84 |
காயக்கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். | 85 |
பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். | 86 |
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். | 87 |
ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. | 88 |
ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். | 89 |
காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். | 90 |