
| கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. | 161 |
| பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. | 162 |
| உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. | 163 |
| கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. | 164 |
| அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. | 165 |
| நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. | 166 |
| குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. | 167 |
| பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. | 168 |
| பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றி யிரு. | 169 |
| ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. | 170 |
