
| மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். | 41 |
| இடைபிங் கலைகளி ரேசக மாற்றி லடையு மரனா ரருள். | 42 |
| அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற் பொங்குமாம் பூரகத்தி னுள். | 43 |
| எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி லுண்ணிலமை பெற்ற துணர்வு. | 44 |
| மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு வுயிர்ப்பின்றி யுள்ளே பதி. | 45 |
| இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற் றராசுமுனை நாக்கதுவே யாம். | 46 |
| கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற் றும்பிபோ னிற்குந் தொடர்ந்து. | 47 |
| இரேச கபூரக கும்பக மாற்றிற் றராசு போனிற்குந் தலை. | 48 |
| வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி லாயுட் பெருக்க முண்டாம். | 49 |
| போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந் தாழ்கின்ற வாயு வடக்கு. | 50 |
