
3எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். | 31 |
3நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு. | 32 |
3உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. | 33 |
3காலொடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. | 34 |
3ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. | 35 |
3மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. | 36 |
3உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. | 37 |
3 நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. | 38 |
3நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. | 39 |
அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். | 40 |