
வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள. | 291 |
சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாருமி னீது பயன். | 292 |
மதியொடு வன்னியொன் றாகவே வந்தால் கதிரவ னாமென்று காண். | 293 |
மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில் உதிக்குமாம் பூரணைச் சொல். | 294 |
தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில் சாற்று மமாவாசை தான். | 295 |
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். | 296 |
அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் சமனா முயிருடம்பு தான். | 297 |
அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு பிண்டத் திலுமதுவே பேசு. | 298 |
ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும் கூறுமப் பூரணை கொள். | 299 |
உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில் மதிக்கு மமாவாசை யாம். | 300 |